'லோக்சபாவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட, வருமான வரி சட்ட திருத்தத்தின்படி, 500 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால், வரி விதிக்கப்படும், பறிமுதல் செய்யப்படும்' என, பரவிய வதந்திக்கு, மத்திய அரசு நேற்று முற்றுப்புள்ளி வைத்தது.
அதேநேரத்தில், கணக்கில் காட்டாத பணத்தில், தங்க நகைகள் வாங்கி பதுக்கி வைத்திருந்து, அது வருமான வரித்துறையினர் சோதனை யில் பிடிபட்டால், அதற்கு கடுமையான வரி விதிக்கப்படும் என்று, எச்சரித்துள்ளது.
கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை
மத்திய அரசு வெளியிட்டது. அதன் தொடர்ச்சி யாக, கணக்கில் காட்டாத கறுப்புப் பணத்தை, 50 சதவீதம் வரியை செலுத்தி, வெள்ளையாக்கும் கடைசி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், அதிரடி சோதனையில் சிக்கும் கறுப்புப் பணத்துக்கு, 85 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என,அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான, வருமான வரி சட்ட திருத்த மசோதா,லோக்சபாவில்,சமீபத்தில் நிறைவேறி யது; ராஜ்யசபாவின் விவாதத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வருமான வரி திருத்த மசோதாவின் படி, குடும்பத்தில் உள்ள பாரம் பரிய நகைகள் உட்பட, அனைத்து தங்க நகை களுக்கும், வரி மற்றும் அபராதம் விதிக்கப் பட உள்ளதாக, வதந்தி பரவியது. 'இது வெறும் புரளியே' என, மத்திய நிதி அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துஉள்ளது.
இது தொடர்பாக, மத்திய நேர்முக வரிகள் வாரி யம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வருமான வரி திருத்த மசோதாவில், தங்க நகைகளுக்கு வரி விதிக்கும் எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை. கணக்கு காட்டாத பணம் மற்றும் சொத்து களுக்கான வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து மட்டுமே, மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
வருமான வரிதுறையினர் நடத்தும் சோதனை களின் போது,திருமணமான பெண்கள்,500 கிராம்; திருமணமாகாத பெண்கள், 250 கிராம்; ஆண்கள், 100 கிராம் வரைதங்கம்
வைத்திருந்தால், அவை பறிமுதல் செய்யப்படாது.அதே நேரத்தில், நேர்மையான வருவாய் மூலம் வாங்கிஉள்ள நகைகள் வைத் திருக்க, எந்த உச்சவரம்பும் கிடையாது; அவை பறிமுதல் செய்யப்படாது.
இதுவரை கணக்கில் காட்டாத வருவாயை, தங்கம் உள்ளிட்டவற்றின் மூலமாக கிடைத்த வருவாயாக சிலர் காட்ட முயற்சிக்கின்றனர். அதற்காகவே, சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுஉள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'பயம் வேண்டாம்'
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த தாக, வருமான வரி துறையினர் சோதனை செய்யும்போது, வீட்டில் உள்ள அனைத்து தங் கத்தையும் தவறுதலாக பறிமுதல் செய்ய கூடாது. இதற்காக, தங்கம் கையிருப்பு குறித்து, ஏற்கனவே வழிமுறைகள் வகுக்கப்பட்டு உள் ளன. அவற்றை தான், தற்போது, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், மக்கள் பயப்பட தேவையில்லை. இன்றைய தேதியில், முறை யாக சம்பாதித்து, வருமான வரிகணக்கு காட்டி, எவ்வளவு தங்கம் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.
English Summary : "In the recently passed in the Lok Sabha, the income tax law amendment, possession of 500 grams of gold over, taxed, confiscated ', as the rumor spread, the federal government ended yesterday.