
வங்கக் கடலில் உருவான நாடா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் நாளை சென்னை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடக்க உள்ளது.
இந்நிலையில் நாடா புயல் பற்றி தெரிய வேண்டியவை,
கனமழை:
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் இன்று முதல் வீசும்.
சென்னை:
சென்னையை பொறுத்தவரை புயல் நெருங்கி வர வர மழையின் வேகம் அதிகரிக்கும். நாடா புயலால் கடலூர், நாகை மற்றும் புதுவையில் பள்ளிகளுக்கு இன்றும், நாளையும் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாராயணசாமி :
தலைமை செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உஷார் நிலையில் இருக்குமாறு புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளா:
நாடா புயலால் கேரளாவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.
English summary:
As Nada cyclone is nearing Chennai, rain lashes the capital. People of Chennai are reminded of last year's flood situation.