சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள நாடா புயலை அடுத்து எண்ணூர், சென்னை, பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போதைய நிலைமைக்கு ஏற்ப சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன்படி கடுமையான புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 60 முதல் 100 கி.மீ. வேகத்திற்கு பலத்த காற்று வீசும்.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
எனவே யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம். கடலுக்கு ஏற்கனவே சென்றவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் இந்த எச்சரிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் எச்சரிக்கை கூண்டின் வரிசை எண்ணும் மாறும் என்றனர்.
இதனிடையே எண்ணூர் துறைமுகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்திலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
English summary :
Cyclonic Storm warning signal 2 hoisted at Chennai,Ennore and Pampan