புதுடெல்லி - பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் கிராமப்புற மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைப் போக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டது. கூட்டுறவு வங்கிகளை நம்பியே இருக்கும் பெரும்பாலான கிராமப்புற மக்கள்தொகைக்கு பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள சிரமங்களைத் தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசிடம் விளக்கம் கோரியது.
பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நடைபெற்றது.
அப்போது அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கூறும்போது, கூட்டுறவு வங்கிகளில் முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை, மற்ற தேசிய மற்றும் தனியார் வங்கிகளை ஒப்பிடும் போது இங்கு இந்த நடவடிக்கைகளைக் கையாள போதிய வலுவில்லை என்று தெரிவித்தார்.
கூட்டுறவு வங்கிகளுக்கு இல்லை :
“மத்திய அரசு சமர்ப்பித்த கூடுதல் பிராமணப்பத்திரத்தின் ஒட்டுமொத்த அத்தியாயம் கூட்டுறவு வங்கியைப் பற்றியதே. பிரச்சினை எங்களுக்கு தெரியாது என்பதல்ல, இந்த வங்கிகளில் போதிய வசதிகள் இல்லை மேலும் கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிக்கும் போதிய நிபுணத்துவம் கூட்டுறவு வங்கிகளுக்கு இல்லை என்பதால் இதிலிருந்து கூட்டுறவு வங்கிகளை விலக்கி வைத்தது மத்திய அரசு” என்றார்.
மேலும் பழைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, கேரளா, கோல்கத்தா, ஜெய்பூர், மும்பை உள்ளிட்ட இடங்களில் இந்த மனுக்களை ஒரே சமயத்தில் விசாரிக்க முடியாது. எனவே இந்த வழக்குகளை ஒன்றிணைத்து ஏதாவது ஒரு உயர் நீதிமன்ற்த்திலோ அல்லது உச்ச நீதிமன்றத்திலோ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும்” என்றார்.
பின்னடைவு :
கூட்டுறவு வங்கிகளுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிதம்பரம், கூட்டுறவு வங்கிகளை விலக்கி வைத்ததால் கிராமப்புற பொருளாதாரம் பெரிய அளவில் பின்னடைவு கண்டுள்ளது என்றார்.மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, அனைவரும் ஒன்றாக அமர்ந்து என்னென்ன பிரச்சினைகள் என்று வகைப்பிரித்து திங்களன்று அளிப்பதாக கூறினார்.இதனையடுத்து டிசம்பர் 5-ம் தேதிக்கு விசாரணை ஓத்தி வைக்கப்பட்டுள்ளது.
English Summary : The old bill eradication campaign, what measures were taken to alleviate the hardships suffered by the rural population to the federal government asked the Supreme Court interpretation. The old currency note from a variety of activities to eradicate the petitions against the Chief Justice tiestakkur yesterday's trial, held before the session comprising ...