டெல்லி: எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் ரயில் மற்றும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
பனிமூட்டம் இன்று காலையும் நீடித்தது. இதனால் ரயில்கள் மற்றும் விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து புறப்படும் 94 ரயில்கள் தாமதமாக புறப்படுகின்றன. 15 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் விமானப் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 6 சர்வதேச விமானங்களும், 7 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டன. ஒரு விமானத்தின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பனிமூட்டத்தால் சாலை போக்கு வரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பனிமூட்டத்துடன் கடுமையான குளிரும் நிலவி வருவதால் நடைபாதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
English summary:
Heavy fog in New Delhi. Rail, flight and road transports are suffered a lot. Most of the trains and flights are delayed. some canceled.