சென்னை: சென்னையில் அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தது . தொழிலதிபர் சேகர் ரெட்டி , சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியுள்ளன. ரூ. 90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் நாடு முழுவதும் கறுப்பு பணத்தை பதுக்கிய பண முதலைகள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த வாரங்களில் முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதேபோல கடந்த செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி மோகன் சக்ரவர்த்தி உட்பட 2 அரசு அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தப் பட்டது.
இந்தச் சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கர்நாடக அரசு சாலை மேம்பாட்டுத் துறை யின் முதன்மை திட்ட அலுவலர் ஜெயசந்திராவின் பெங்களூரு வீட்டில் சோதனை நடத்தினர்.
அவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினர். இதுமட்டுமில்லாமல் ஜெய சந்திராவின் மகனும் தொழிலதிபருமான பிரிஜேஷ் ஜெயசந்திராவுக்கு சொந்தமாக சென்னை, ஈரோட்டில் உள்ள இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அங்கு பல கோடி ரூபாய் ரொக்கம், தங்கம், வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சென்னையில் இன்று அண்ணா நகர், திநகர் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை நடந்தது . தொழிலதிபர் சேகர் ரெட்டி , சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.90 கோடி மற்றும் 100 கிலோ தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியுள்ளன. ரூ. 90 கோடியில் ரூ.70 கோடி புதிய நோட்டுகள் ஆகும்.

English summary:
IT officials raid in Chennai Sekar reddy and Seenivasa reddy house. 100 kg gold and Rs.90 crore seized