சென்னை: தி.முக., தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், டிச., 20ம் தேதி நடக்க இருந்த அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜன.,4ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுபடி, அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவை நடத்த வேண்டும். தி.மு.க.,வின் பொதுக்குழு கடைசியாக, 2015 ஜனவரி மாதம் நடந்தது.
நடப்பு ஆண்டில், டிச., 20ம் தேதி நடக்கும் என முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த, 23ம் தேதி மாலை, ‛டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார். இதையடுத்து, தேர்தல் ஆணைய அனுமதி பெற்று வரும் ஜன., 4ம் தேதி தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
செயல் தலைவர் பதவி:
தற்போது, அக்கட்சியின் பொருளாளராக உள்ள ஸ்டாலினுக்கு, பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் காணப்படுகிறது.

English Summary:
Chennai: DMK., Chief Karunanidhi admitted to hospital, Dec., The party's general meeting held on 20 January., Will take place from 4 reported. Directions Election Commission, political parties, the board should hold once a year. DMK General Council finally took place in January 2015.