சென்னை: ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம், தமிழக மக்களின் தாய் போன்றவர் என நடிகை சரோஜா தேவி தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பழம்பெரும் நடிகை சரோஜா தேவி தனது தோழி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறகையில்,
ஜெயலலிதா ஒரு பெரிய தெய்வம். தமிழக மக்களுக்கு எல்லாம் தாய் போன்றவர். ஷூட்டிங்குக்கு வரும்போது தேவதை போல வருவார் ஜெயலலிதா.
என்னிடம் கன்னடத்தில் தான் பேசுவார். சிறு சிறு வேடங்களில் நடித்து உங்களை இறக்கிக் கொள்ளாதீர்கள் என்று கூறுவார். சிறைக்குப் போய் விட்டு திரும்பியபோதும் அதே முகத்தோடு, புன்னகையோடு வந்தவர் ஜெயலலிதா.
என்னென்ன கஷ்டம், அவமானத்தை அனுபவித்தார் ஜெயலலிதா என்றார்.
English summary:
Yesteryear actress Saroja Devi said that Jayalalithaa was like a Godess and she used to come to the shootingspot like an angel.