சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் இல்லம் சென்று சேர்ந்தது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெறும்.
ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
மெரினா கடற்கரை பகுதியில், புதிய கட்டிடங்கள் கட்ட விதிமுறை கிடையாது என்பதால், எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்கப்படும் என்று தெரிகிறது.
English summary:
Jayalalitha mortal remain will be remains at poes garden house till 10 am. Jayalalitha cremation today evening 4.30 pm at Marina Beach.