சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக இப்போதுதான் நீண்ட காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால் கடைசி வரை அவர் திரும்பாமலேயே போய் விட்டார்.
முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றதே இல்லை. தனது வாழ்நாளிலேயே முதல் முறையாக அவர் இப்போதுதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல் நிலை கடைசி வரை மர்மமானதாகவே இருந்து வந்தது. ஆரம்பத்தில் நீர்ச்சத்து குறைபாடு என்று காரணம் கூறப்பட்டது. ஆனால் கடைசியில் அவரது இதயம் செயலிழந்து மரணம் சம்பவித்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது வாழ்நாளில் முதல் முறையாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வீடு திரும்பாமலேயே அவர் காலமாகியுள்ளார்.
எப்படியும் ஜெயலலிதா திரும்பி விடுவார். மீண்டும ஆட்சி புரிவார் என்ற அபார நம்பிக்கையில் அதிமுகவினரும், பொதுமக்களும் இருந்து வந்தனர். ஆனால் கடைசி வரை முதல்வர் ஜெயலலிதா திரும்ப வரவே இல்லை. இதுவரை தன்னை நம்பிய அதிமுகவினரை ஜெயலலிதா ஏமாற்றியதில்லை. ஆனால் முதல் முறையாக அவர் ஏமாற்றி விட்டார்.

English summary:
Chief Minister Jayalalitha never disappointed her cadres, but for the first time she disappointed her cadres through her death.