சென்னை: சட்டம் ஒழுங்கு சீராக இருக்க ஒத்துழைத்த தமிழக மக்களுக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வின்றி உழைத்த ஒவ்வொரு காவலருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தலைமைச்செயலாளர், டிஜிபிக்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெயலலிதாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்தது. தமிழக அரசு மிகவேகமாக செயல்பட்டதற்கு பெருமையடைகிறேன்.
ராஜாஜி அரங்கு, மெரினாவில் மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு இருந்தது. கடல்போல் திரண்டிருந்த மக்கள் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டனர். சட்டம் ஒழுங்கை கட்டிக்காத்த தமிழக மக்களுக்கு பாராட்டுக்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காவல்துறை மீது அக்கறைகொண்டிருந்தார். சென்னை போலீசார் சூழ்நிலையை சிறந்த முறையில் கையாண்டனர்.
இக்கட்டான நிலையில் எப்படி செயல்படுவது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஓய்வின்றி உழைத்த ஒவ்வொரு காவலருக்கும் எனது பாராட்டுகள். சென்னை மாநாகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் குழுவுக்கு பாராட்டுக்கள். ராஜாஜி அரங்கு, மெரினாவில் மிகச்சிறப்பான ஒருங்கிணைப்பு இருந்தது. கடல்போல் திரண்டிருந்த மக்கள் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டனர். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

English summary :
Jayalalithaa funeral: Tamil Nadu Acting Governor Ch Vidyasagar Rao appreciation to the people