டெல்லி: பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்பல்லோவில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இன்று அதிகாலையில் முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர் அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
ஜெயலலிதா உடல் நிலை குறித்து விசாரிக்க மும்பையில் இருந்து நேற்று இரவு சென்னை வந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து சென்றார்.
இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து ஆளுநர் வித்யாசகர் ராவ்விடம் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கேட்டறிந்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா, முதல்வர் உடல் நிலை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில் வெங்கையா நாயுடு இன்று மாலை சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary :
Union Minister Venkaiah Naidu to visit Chennai today.Tamil Nadu Chief Minister J Jayalalithaa is being treated after suffering a cardiac arrest.