சென்னை: முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்கு ஞாயிற்றுக்கிழமையன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா காலமானார். முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும்.
பின்னர் சென்னை ராஜாஜி ஹாலில் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
A three day holiday has been declared in Tamil Nadu following the death of Tamil Nadu Chief Minister, J Jayalalithaa. The decision was taken by the education department following the death of the CM at 11.30 PM