சென்னை: பத்திரிகை உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சோ ராமசாமியின் மறைவுக்கு நடிகர் கமல் டிவிட்டர் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர், அரசியல் ஆலோசகர் எனப் பன்முகத் திறமையாளர் சோ ராமசாமி(84). கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் நடிகர் கமல், டிவிட்டர் வாயிலாக தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். அதில் அவர், "மற்றொரு சகாப்தம் நம்மை விட்டுப் பிரிந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
சோவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் கமல் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று முன் தினம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கும் டிவிட்டர் வாயிலாகத் தான் கமல் இரங்கல் தெரிவித்திருந்தார். அதிலும், அவர் ஜெயலலிதாவின் பெயரைக் குறிப்பிடாமல், 'சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்' என கமல் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது.
இது சமூகவலைதளப் பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக அமைந்தது. இந்த சூழ்நிலையில் மீண்டும் அதே போன்று சோவிற்கும் பெயரைக் குறிப்பிடாமல் கமல் இரங்கல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary :
Actor Kamal hassan took to Twitter and condoled the demise of Thuglak founder and editor Cho Ramaswamy.