
பிரதமர் நரேந்திர மோடி சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மோடி கிளம்பிச் சென்ற பிறகு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். பின்னர் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், லோக்சபா துணைத் தலைவர் தம்பித்துரை, சசிகலாஜி ஆகியோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
தமிழகத்திற்கு எந்த உதவி தேவைப்பட்டாலும், எந்த நேரமாக இருந்தாலும் மத்திய அரசு அதைச் செய்து தரும் என்று முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு உறுதியளித்தார் மோடி என்றார்.
English summary:
Central minister Venkaiah Naidu said that PM Modi assured CM O. Panneerselvam that centre will do any help for Tamil Nadu.