
அருகில் நின்றிருந்த சசிகலா, இளவரசியைத் தேடி போன மோடி ஆறுதல் வார்த்தைகள் பேசினார். சசிகலாவின் தலையை தொட்டு ஆறுதலாக பேசினார். இளவரசி, திவாகரன், உள்ளிட்டோர்களிடமும் ஆறுதலாக பேசினார் மோடி.
அந்த நேரத்தில் அருகில் வந்த ஓ.பன்னீர் செல்வம், மோடியைப் பார்த்து குமுறி குமுறி அழுதார். ஓ.பன்னீர் செல்வத்தைப் பிடித்து ஆறுதல் சொன்னார் மோடி ஆசுவாசப்படுத்தினார்.
கூடியிருந்த மக்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார் பிரதமர் மோடி. அனைவரின் கைகளை பிடித்தும் ஆறுதல் சொன்னார். இறுகிய முகத்துடன், கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை கையெடுத்து கும்பிட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் பிரதமர் மோடி.
சசிகலா குடும்பத்தினரை தேடி தேடி போய் மோடி ஆறுதல் சொல்லி பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
English summary:
PM Modi paid his homage to the late leader Jayalalitha and reached out to Sasikala, her husband Natarajn and consoled them.