சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ''நாடா'' புயலால் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ''நாடா'' புயல் வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு அருகே 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
நாளை கரையைக் கடக்கும் :
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கடலூர் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் சீற்றம்:
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் பலத்தக் காற்றும் வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடலூர், புதுச்சேரி, சென்னை காசிமேடு உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களும் கடலுக்கு செல்ல வில்லை. சென்னை சென்னையில் படகுகள் அனைத்தும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் கடற்கறைகளில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடலோரங்களில் தொடர்ந்து கொந்தளிப்பு நிலவி வருவதால் புயல் கரையைக் கடக்கும் வரை மீனவர்கள் கடலுக்குள் போக மாட்டார்கள்.
English summary:
Cyclone Nada is going to land fall tomorrow morning in between Cuddalore and Vedarnyam. due to this cyclone heavy wind and rough sea in Tamil Nadu and Puducherry. due to this fishermen did not go to sea for catching fish.