புதுடில்லி: ராணுவம் மற்றும் விமானப்படையின் புதிய தளபதிகள் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர் கூறியுள்ளார்.
ராணுவ தளபதி தல்பீர் சிங்கும், விமானப்படை தளபதி அருப் ராஹாவும் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர். இதனையடுத்து அடுத்த தளபதிகள் யார் என்பதற்கான பரிசீலனை துவங்கியுள்ளது. இது தொடர்பான கோப்பு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் ஒப்புதலுக்கு பின் விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. கிழக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் பிரவீன் பக்ஷி, தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டனர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீஜ், ராணுவ துணை தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஆகியோரில் ஒருவர் அடுத்த ராணுவ தளபதியாக நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. ஏர் மார்ஷல் பிரேந்தர் சிங் தோநோவ் அடுத்த விமானப்படை தளபதியாக நியமிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரீக்கர் கூறியதாவது: ராணுவ மற்றும் விமானப்படை புதிய தளபதி விரைவில் நியமிக்கப்படுவார். இதற்கான காலக்கெடு பற்றி இப்போது கூற முடியாது. அக்னி ஏவுகணை சோதனை நடந்து வருகிறது. இது பற்றி இப்போது கருத்து கூற முடியாது. இந்த வருடம் நடந்த ஏவுகணை சோதனை அனைத்தும் வெற்றி பெற்றுள்ளது என்றார்.
English Summary:
New Delhi: The Army and Air Force chiefs of staff of the new name will be announced soon, said the defense minister parikkar