டெல்லி: ரூபாய் 2000 வரையிலான டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு சேவை வரியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமற்ற பரிவர்த்தனையை ஊக்குவிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் மின்னனு பரிவர்த்தனையை நடைமுறை படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக மானிய விலையில் வணிகர்களுக்கு ஸ்வைப் மிஷின்கள் வழங்க வங்கிகள் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்நிலையில் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் 2000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்ய சேவை வரியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கமற்ற பணபரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனைக்கு 15 சதவீதம் சேவை வரி வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary :
There is no service tax for debit and credit card transaction upto Rs two thousand. To encourage cashless transaction the government gives this offer.