கான்பூர், நேர்மையற்றவர்களை பாதுகாக்க எதிர் கட்சிகள் முயற்சிக்கின்றன என்று கான்பூரில் நடந்த பா.ஜ.க. கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கூறினார்.
கான்பூரில் நேற்று பா.ஜ.க பரிவர்த்தன் பேரணி கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
நாட்டில் உள்ள கறுப்பு பணம், ஊழல் , வரி ஏய்ப்பு ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற முடிவை எங்களது அரசு எடுத்தது.
இந்த ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் எதிர் கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. நேர்மையற்றவர்களை பாதுகாக்கவே எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தை முடக்கியுள்ளன.
பணத்தை எடுப்பதற்கு ஏ.டி.எம் மையங்களில் நிற்கும் மக்களை சில அரசியல் வாதிகள் தூண்டி விட முயற்சிக்கிறார்கள். ஆனால் சாதாரண மக்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. அவர்கள் அமைதியாக உள்ளனர். நாட்டின் நீண்ட கால பயன்களை அறிந்து அமைதியாக இருக்கிறார்கள். ரூபாய் நோட்டு குறித்து அரசு எடுத்த முடிவு பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் பாராளுமன்றம் செயல்படுவதை எதிர் கட்சிகள் அனுமதிக்கவில்லை. ஒரு மாத கால கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கைகளும் இல்லாமல் முடங்கியுள்ளது. ரூபாய் நோட்டு குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க எதிர் கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை. ஊழலை எதிர்ப்பதாக காட்டிக்கொண்ட எதிர் கட்சிகள் தற்போது நேர்மையற்றவர்களை பாதுகாக்க பாராளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியுள்ளனர். ரொக்கம் இல்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும். மொபைல் போனை வங்கி நிதி பரிவர்த்தனைக்கு பயன்படுத்த வேண்டும் என நான் சொல்லி வருகிறேன். ஏழைகளுக்கு செல்போன் கிடையாது. அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என அவர்கள் (எதிர்கட்சியினர் )கூறுகிறார்கள். ஆனால் தற்போது ஏழைகள் வங்கிக்கு சென்றாலும் பணம் இல்லை என அவர்கள்(எதிர் கட்சியினர் ) பொய்யை பரப்புகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
English summary:
Kanpur, Kanpur not believable the BJP was trying to protect the opposition parties Modi said at the meeting yesterday.