சென்னை: பார்வையாளர்களை அனுமதிக்காமல் போயஸ்கார்டன் கதவு மூடப்பட்டதால், அங்கு வந்த அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
யூகங்கள்:
தமிழக முதல்வரும், அதிமுக பொதுசெயலருமான ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொதுச்செயலர் பதவியை யார் வகிப்பார் என்ற பேச்சு பரவலாக எழுந்தது.
இது தொடர்பாக, மீடியாக்களில் பல்வேறு யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா , மதுசூதனன், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டவர்கள் போயஸ்கார்டனில் சசிகலாவை நேரில் சென்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சசிகலா அதிமுகவுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும் என கேட்டு கொண்டனர். செங்கோட்டையன் கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினார்.
ஆரம்பமே இப்படியா ?
இந்நிலையில் போயஸ்கார்டனில் குவிந்த அதிமுக தொண்டர்கள், உள்ளே சென்று பார்வையிட விரும்பினர். ஆனால் போயஸ் கதவு மூடப்பட்டது இதையடுத்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இது குறித்து அதிமுக வட்டாரத்தில் போயஸ் கதவு மூடப்பட்டதால் அதிமுகவினர் போராட்டம் நடத்தியதாக கூறினர். சிலர், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது என்றனர்.

English Summary:
Chennai: poes gardern allowing the audience closed the door, came in and demonstrated ADMK people.