பாட்னா: பீகார் மாநிலத்தில் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய 500 ரூபாய் நோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பீகார் மாநிலம் கயாவுக்கு வந்த ஜன் சதாப்தி விரைவு ரயிலில் போலீசார் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 3 பைகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த பைகளில் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 14 மதுபான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஆங்காங்கே செல்லாத நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வருகிறது. இதனிடையே கோவா மாநிலம் போண்டா மற்றும் பொர்வோரிமில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள புதிய 2000 நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து கோவா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary:
Old 500 notes Rs 35 lakhs seized in Jan Shatabdi express train in Gaya.