சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை தொடர்ந்து நேற்றிரவு மூடப்பட்ட பெட்ரோல் பங்குகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலையில் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல வகையான வதந்திகள் பரவின. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன.
பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை இருக்கலாம் என வதந்தி பரவியது. ஆனால் இதை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மறுத்தார்.
இந்நிலையில், இன்று காலை முதல் சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்குகள், திறக்கப்பட்டுள்ளன. பஸ்கள் இயங்குகின்றன. ஆட்டோக்கள் ஓடுகின்றன. அதேநேரம், தொடர்ந்து அவர்கள் ஊடக செய்திகளை கவனித்தபடி உள்ளனர். போலீசாரும் சென்னை உள்ளிட்ட பல நகரங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary:
Petrol bunks are re opened today in many cities in Tamilnadu including Chennai.