சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சென்னைக்கு வந்து ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி செலுத்த நேற்று காலையிலேயே திட்டமிடப்பட்டது. அதன்படி அவர் தனி விமானத்தின் மூலம் சென்னைக்கு புறப்பட்டார். ஆனால் அந்த விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால், பிரணாப் சென்னைக்கு வராமல் மீண்டும் டெல்லிக்கே திரும்பிச் சென்றார். இருப்பினும் தன் பயணத்தை ரத்து செய்யாமல் சுமார் 4 மணி நேரம் கழித்து, IAF விமானத்தில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வந்தார். பின்னர் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

English summary:
Due flight’s technical fault President Pranab Mugarjee is getting delay to come Chennai to pay tribute to Jayalalithaa.