சென்னை:
மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகி விட்டதாக, அக்கட்சியின் பொது செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
கட்சியின், உயர்நிலைக் கூட்டம், கடந்த 27ம் தேதி, வைகோவின், சென்னை, அண்ணா நகர் இல்லத்தில் நடந்தது. அப்போது, மக்கள் நலக் கூட்டணியில் தொடர்ந்து நாம் நீடிக்க வேண்டும் என, கட்சியின் உயர் நிலைக் குழு உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியும், இனியும் அவமானப்பட்டுக் கொண்டு அங்கிருக்க முடியாது; நமக்கு போக்கிடம் இல்லை என்று, மக்கள் நல கூட்டணியினர் உள்ளனர்.
அவர்கள் போக்கு பிடிக்கவில்லை. தொடர்ச்சியாக அவமானப்பட்டுக் கொண்டு அங்கிருக்கத் தேவையில்லை என, ஆவேசமாக வைகோ பேசியுள்ளார். அதன்பின்பே, மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., விலகும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து, ம.தி.மு.க., முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
கடந்த 2016 சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளை இணைத்து, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக ஒரு மக்கள் நல கூட்டு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும்; தேர்தல் நேரத்தில் தேவையானால், அதை கூட்டணியாக மாற்றிக் கொள்ளலாம் என, அனைத்து கட்சி தரப்பினரும் தொடர்ந்து வைகோவை வலியுறுத்தினர்.
அதே எண்ணத்தில் இருந்த வைகோவும், இதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால், நீண்ட தயக்கத்துக்குப் பின் தான், அவர் அதற்கு இசைவு தெரிவித்தார். இப்படியெல்லாம் பேசி வருகிறவர்கள், தங்கள் கருத்துக்களில் அவ்வளவு உறுதியாக இருந்து செயல்படுவார்களா? தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராக இருக்கும் தனக்கு உரிய மரியாதையும்; அந்தஸ்தும் அளிக்கப்படுமா என்று சந்தேகம் கொண்டார்.
இருந்த போதும், காலத்தின் கட்டாயம் கருதி அதை ஏற்றுக் கொண்டார். மக்கள் நல கூட்டு இயக்கம் பிரமாண்டமாக உருவானது. அந்த இயக்கத்தில் இணைந்து செயல்படுவதாக உறுதி அளித்த த.மா.கா., எடுத்த எடுப்பிலேயே கழன்று கொண்டு விட்டது.
அதேபோல, மனித நேய மக்கள் கட்சியும் வரவில்லை. கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் மட்டும் இருந்தால் போதும் என முடிவெடுத்து, ம.தி.மு.க., மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இணைந்து செயல்பட முடிவெடுத்தது. வைகோவே, முக்கியஸ்தராக இருந்து செயல்பட்டார். பல்வேறுவித போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
பின், தேர்தல் நெருக்கத்தில், மக்கள் நல் கூட்டு இயக்கம், மக்கள் நல கூட்டணியாக மாறியது. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும் நிர்ப்பந்தப்படுத்தி, வைகோவை, தலைவர்கள் நியமித்தனர். தொடர்ச்சியாக,வேறு சில கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து, கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என, வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எல்லோரும் ஆசைப்படுகிறார்கள் என்றதும், தே.மு.தி.க., விஜயகாந்திடமும், த.மா.கா.,வின் வாசனிடமும், வைகோவே பேசினார்.
ஆரம்பத்தில் முரண்டு பிடித்த இருவருமே, வைகோவின் வற்புறுத்தலைத் தொடர்ந்தே கூட்டணியில் இணைந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் கூட்டணிக்குள் வந்தது முதலேயே, வைகோவுக்கு சிக்கல் துவங்கியது.கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடிப் பேசித்தான், தேர்தலை எப்படி எதிர்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்தான், இரு திராவிட இயக்கங்களையும் எல்லோரும் விமர்சித்தனர். அதில் வைகோ மட்டும், தி.மு.க.,வை குறிவைத்து தாக்குவதாகவும்; அ.தி.மு.க.,வை மயில் இறகால் வருடிக் கொடுப்பது போலவும் நடந்து கொள்கிறார் என, மற்ற கட்சிகளின் தலைவர்கள் கருதினர்.இதனால், துவக்கத்திலேயே கூட்டணிக்குள் முரண்பாடு ஏற்பட்டு, தொண்டர்கள் வரை அது தொடர்ந்தது. விளைவு - கூட்டணி போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் படு தோல்வி. பல இடங்களில் டிபாசிட் கூட கிடைக்கவில்லை. உடனே, மொத்த பழியையும் வைகோ மீது கூட்டணி தலைவர்கள் போட்டனர்.
கூட்டணியில் இருந்து முதலாவதாக த.மா.கா., வெளியேறியது; தொடர்ச்சியாக தே.மு.தி.க.,வும் வெளியேறியது. இரண்டு கட்சிகளும் வேறு வேறு கூட்டணிக்கு முயற்சித்து விட்டு, கடைசி நேரத்தில் மக்கள் நல கூட்டணிக்கு வருகிறது. நம்பகத்தன்மையை இழந்து விட்டு, கூட்டணிக்கு வருகிறவர்களால், கூட்டணிக்கு எந்த நலனையும் செய்ய முடியாது என, துவக்கத்தில் இருந்து வைகோ வலியுறுத்தியதை யாரும் கேட்கவில்லை.
ஆனால், தோல்வி என்றதும், மொத்தப் பழியையும் வைகோ மீது சுமத்தினர். விஜயகாந்தும்; வாசனும், வைகோ மீது கடும் விமர்சனங்களை வைத்தனர். இதற்கு, கூட்டணியில் இருந்த மற்றத் தலைவர்களும் அமைதியாக இருந்தனர். சில நேரங்களில், தங்கள் தரப்பிலும், சில விஷயங்களை சொல்லி, வைகோ மீதான அதிருப்தியை கக்கினர்.
இதெல்லாம் தொடர்ச்சியாக, வைகோவுக்கு வந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில், மார்க்சிஸ்டுகள் சார்பில், கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வைகோவை விலக்க வேண்டும் என முயற்சித்தனர். எங்கள் நடைமுறைப்படி, கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு தேவையில்லை என, நிர்ப்பந்தம் விதித்தனர்.
அப்போதே கோபமான வைகோ, கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அப்போது சமாதானம் பேசி, கூட்டணிக்குள் இறுத்தியவர்கள், தொடர்ந்து அவரை, சங்கடப்படுத்தினர்; அவமரியாதைக்குள்ளாக்கினர்.
இந்நிலையில்தான், நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடி எடுத்திருக்கும் கறுப்புப் பணம் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தார். மோடியை நேரிலேயே சந்தித்து, தன் ஆதரவை தெரிவித்தார். உடனே, பா.ஜ., கூட்டணியில் வைகோ இணையப் போகிறார் என, கூட்டணி கட்சியினரே பேசத் துவங்கினர். வழக்கம் போல, பணக் குற்றச்சாட்டும் வைக்கப்பட்டன.
இதற்கிடையில், புதுச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டுக்கு, கம்யூனிஸ்ட்களை மட்டும் அழைத்து விட்டு, வைகோவை அழைக்காமல் விட்டு விட்டனர்; கிட்டத்தட்ட புறக்கணித்தனர்.
இதன் பின்பும், கூட்டணிக்கு ஒட்டிக் கொண்டிருக்க வைகோ விரும்பவில்லை. மாநாடு நடப்பதற்குள் கூட்டணியில் இருந்து வெளியேறி விட வேண்டும் என முடிவெடுத்தார்.
அதற்காகவே, உயர் நிலை குழுவைக் கூட்டி விவாதித்து, தன் நிலையை எடுத்துச் சொல்லிவிட்டு, கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அறிவித்து விட்டார். இனி, அவர் சுதந்திரப் பறவை. ம.தி.மு.க.,வின் எதிர்கால நலனுக்காக எந்தக் கூட்டணியிலும் இணைந்து கொள்வார்.
வெளிப்பூச்சுக்கு, மக்கள் நல் கூட்டணித் தலைவர்களுடன், நட்பு; உறவுடன் இருப்பது போல காட்டிக் கொண்டாலும், கூட்டணியில் இருந்து ம.தி.மு.க., வெளியேறிய பின், மக்கள் நல கூட்டணியினர், வைகோ மீது கடும் கோபத்தில் உள்ளனர். அது எப்படி போகும் என தெரியாது. ஆனால், வைகோ, மோடியை ஆதரிப்பதில் தீவிரமாக உள்ளார்.இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.
English Summary:
Chennai: MDMK from a welfare coalition, had withdrawn, the party's general secretary Vaiko said. The party's high-level meeting, the 27th, Vaiko, Chennai, Anna Nagar took place in homes. Then, we continue to extend the Public Welfare Alliance, a group of high-level members of the party, stressing that there was no longer able Ir respect That we do not have to go, people are health ally.