தஞ்சாவூர்: நாடா புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தூரத்திலும் புதுவையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.
நாடாபுயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது. அதிகாலை காற்றுடன் கனமழை பெய்து வருவதால் இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, மதுக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
நாடா புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து நாகை மாவட்டத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் சென்றடைந்தனர்.
English summary:
Northeast monsoon and the Cyclone Nada in Bay of Bengal caused a fresh wet spell on Thursday, bringing copious rains to Thanjavur, Tiruvarur and Nagapattinam districts in Tamil Nadu.