புதுடில்லி: ரிசர்வ் வங்கி நெறிமுறைகளை மீறிய 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும், 6 பேரை இடமாற்றம் செய்துள்ளது.
மத்திய அரசின் கறுப்பு பண வாபஸ் நடவடிக்கையை தொடர்ந்து கறுப்பு பண பதுக்கல்காரர்கள் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள்
கறுப்பு பண முதலைகளின் சட்ட விரோத முயற்சிக்கு வங்கி அதிகாரிகள் சிலர் உதவுவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ரிசர்வ் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் பண பரிவரித்தனைகள் தொடர்பாக பல்வேறு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை விதித்தது.
எச்சரிக்கை
அதில், பண பரிமாற்றம் தொடர்பான விஷயங்களில் வங்கி அலுவலர்கள் கவனமாக இருக்க வேண்டும். பரிவர்த்தனை ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். கறுப்பு பண பதுக்கல்காரர்களுக்கு எவ்விதத்திலும் உதவ கூடாது. அவ்வாறு உதவி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதிரடி நடவடிக்கை
இந்நிலையில், பணபரிவர்த்தனையின் போது ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக பொதுத் துறை வங்கிகளை சேர்ந்த 27 வங்கி அலுவலர்களை மத்திய நிதி அமைச்சகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. 6 பேர் இடமாற்றம் செய்துள்ளது.