லக்னோ:உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட சமஜ்வாதி கட்சி விரும்புவது, அதன் மோசமான நிலையை வெளிப்படுத்துவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடக்கவுள்ளது.ஆட்சியைப் பிடிப்பதற்காக மாநிலத்தின் மிகப் பெரிய கட்சிகளான சமஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ், பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், தற்போதைய ஆட்சியைத் தக்க வைத்து வரலாற்றுச் சாதனை படைக்க முயலும் முதல்வர் அகிலேஷ் யாதவ், கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க தயார் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
மோசமான நிலை:
இதுகுறித்து மாயாவதி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2012இல் நடைபெற்ற சட்டமன்த் தேர்தலில் தனித்து நின்று ஆட்சியைப் பிடித்த சமஜ்வாதி கட்சி, தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்புகிறது.இதனால் மாநிலத்தில் அக்கட்சியின் நிலை மோசமடைந்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் சமஜ்வாதி வேட்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓட்டுக்கள் பா.ஜ.க.,வுக்கு சென்றடைந்தது.சமஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலால் அகிலேஷ் யாதவ் அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அக்கட்சியில் தற்போது நிலவும் குடும்பப் பிரச்னை ஓய்வதற்கு நீண்ட நாள்கள் ஆகும் என்று தெரிகிறது.என்று அந்த அறிக்கையில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
English Summary;
Lucknow: The Uttar Pradesh state assembly elections in alliance would compete samajvati Party, Bahujan Samaj Party leader Mayawati said that shows its worst.