
சசிகலா அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக பதவியேற்க முயற்சிப்பதாகவும், அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை போலவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சில இடங்களில் சசிகலா உருவப்படம் கிழிக்கப்பட்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
இந்த சூழ்நிலையில், போயஸ் இல்லத்தில் இன்று சில பெண்களை சந்தித்து சசிகலா பேசியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த அந்த பெண்கள் வந்ததாகவும் அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறியதாகவும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களை சசிகலா சந்தித்து ஆறுதல் கூறிய விவகாரம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary:
Sashikala consolidates the party members, who visits poes garden.