சமைக்காமல் உண்ணக் கூடிய பிரட், பிஸ்கட் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நடா புயல் கரையைக் கடப்பதையொட்டி, பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை வெளியிட்ட அறிவுரைகள்:
வானொலி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து கவனித்து வானிலை அறிவிப்புகளை தெரிந்துகொள்ள வேண்டும். வானொலி-தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகாரப்பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்குத் தெரிவிப்பது நல்லது. புயல்காற்றானது கதவு, ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
கடற்கரை-நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்குச் சென்று விட வேண்டும்.
குடியிருப்பு வெள்ளம், புயலால் பாதிக்கப்படாது எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும், அதிகாரப்பூர்வாக கேட்டுக் கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
நீர்நிலைகள், ஆற்றுக் கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்க வேண்டும். சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகளான பிரட், பிஸ்கட், பழங்கள் ஆகியவற்றை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். போதுமான குடிநீரை பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
உயரமான பகுதிகளில் வைக்கவும்: மழை நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்க வேண்டும். குழந்தைகள், சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்குத் தேவையான உணவுப் பொருள்களை இருப்பு வைப்பது முக்கியம். மழைநீரில் செல்லும்போது, கையில் குச்சியை வைத்துக் கொள்ள வேண்டும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. மின் ஒயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்புள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்க வேண்டும். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களில் இருந்து வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டாம். மின்கம்பங்களில் இருந்து தளர்வான, அறுந்த மின் கம்பிகளை கவனமாகத் தவிர்க்கவும்.
பேரிடரால் பாதுகாப்புக்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்கச் செல்லக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
English Summary : Nada storm katappataiyotti coast, the Revenue Department issued instructions on measures to make the general public:
radio, TV followed to obtain weather updates. The official message is received in the radio-television is only better to inform others.