புதுடில்லி: ‛‛ஊழல் புகாரில் சிக்கிய சவுதாலா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கவுரவ ஆயுட்கால தலைவர் பதவியிலிருந்து விலகாவிட்டால், பதவி நீக்கம் செய்யப்படுவார்,'' என, மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு:
சென்னையில் நடந்த ஐ.ஓ.ஏ., எனப்படும் இந்திய ஒலிம்பிக் சங்க பொதுக்குழு கூட்டத்தில், காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய கல்மாடி மற்றும் மற்றொரு முன்னாள் தலைவரான அபய் சிங் சவுதாலாவுக்கு கவுரவ ஆயுட்கால தலைவர் பதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த 2012 - 14 வரை பொறுப்பிலிருந்த சவுதாலாவும், ஊழல் புகாரில் சிக்கியவர். இவர்களின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாகவும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இந்த பதவியை ஏற்க கல்மாடி மறுத்துவிட்டார். ஆனால், இந்த பதவியை ஏற்பதில் சவுதாலா உறுதியாக இருந்தார்.
எச்சரிக்கை:
இந்நிலையில் மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறியதாவது: கல்மாடி போன்று, சவுதாலாவும் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் விலகாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு பதவி நீக்கம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
NEW DELHI: '' Corruption Report Chautala of the Indian Olympic Association's Honorary Life President of the victims from the post unless the dismissal, '', Union Minister Vijay Goel said.