
ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் சூர்யாவுடன் எஸ் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தந்தை கமல் ஹாஸனின் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் ராஜ்குமார் ஜோடியாக பெஹன் ஹோகி தேரி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு லக்னோவில் நடந்து வருகிறது.
கமல்:
அப்பாவுடன் சேர்ந்து பணியாற்றுவது அருமையான அனுபவம். அதே சமயம் பயமானதும் கூட. காரணம் அவர் தயாரித்து இயக்குகிறார். அதனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மன அழுத்தம் அதிகம் என்கிறார் ஸ்ருதி.
ஸ்ருதி :
அப்பா என் நடிப்பை பாராட்டினார். அது தான் எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். அவர் நமக்காக பாராட்ட மாட்டார். அவர் விரும்பியபடி நடிக்காவிட்டால் முகத்திற்கு நேராகவே கூறிவிடுவார் என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.
நடிப்பு :
நான் இவருடன் தான் ஜோடி சேர்வேன் என்று இல்லை. என்னால் சேரை கூட ரொமான்ஸ் செய்ய முடியும் ஸ்ருதி என்று அப்பா கூறினார். அவரால் அது முடியும் என்று ஸ்ருதி கூறியுள்ளார்.
ராஜ்குமார் ராவ்:
அஜய் கே. பன்னாலால் இயக்கி வரும் பெஹன் ஹோகி தேரி படத்தில் ராஜ்குமார் ராவ் ஜோடியாக நடிக்கிறேன். அவர் திறமையான நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி என்கிறார் ஸ்ருதி.
English summary:
Despite having been directed by the biggest names while acting in movies across several languages, actor Shruti Haasan felt scared when her father Kamal Haasan helmed their upcoming film.