
அரசியல் கட்சித்தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் இன்று ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தராஜன் மக்களின் தலைவியாக, தமிழின தலைவியாக திகழ்ந்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழிசை சவுந்தரராஜன், அருகில் நின்று கொண்டிருந்த சசிகலாவை கண்டு கொள்ளவில்லை. அதே நேரத்தில் அருகில் நின்று கொண்டிருந்த தம்பித்துரைக்கு வணக்கம் தெரிவித்து விட்டு கிளம்பினார். ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்த வரும் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் யாரும் சசிகலாவை கண்டு கொள்ளவில்லை.
English summary:
TN BJP leader Tamilisai and other BJP leaders avoided wishing Sasikala Natarajan during their visit to Rajaji hall.