வாஷிங்டன்: தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விவகாரம் தொடர்பாக விமர்சித்த சீனாவுக்கு டொனால்டு ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீண்டகால கொள்கைக்கு எதிராக தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு ட்ரம்ப் டிசம்பர் 2-ம் தேதி தொலைபேசியில் பேசிய விவகாரம் சர்வதேச வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் டொனால்டு ட்ரம்ப் வெள்ளிக்கிழமை(டிசம்பர்2) பேசினார் என்றும், அப்போது தைவானுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றில் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாகவும் ட்ரம்ப் அலுவலகம் வௌயிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது, இவ்வாண்டு தொடக்கத்தில் தைவான் அதிபராக தேர்வான சாய் இங்வென்னுக்கு டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார்.
கொள்கை மாற்றம் :
இருப்பினும், தைவான் அதிபருடன் டொனால்டு ட்ரம்ப் பேச்சு நடத்தியது அமெரிக்காவில் கொள்கை மாற்றம் ஏற்படும் வாய்ப்பினை எடுத்துக்காட்டவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தைவான் சீனாவின் ஒரு பகுதி என்று அந்நாடு தெரிவித்து வருகிறது.
சீனா ஆக்கிரமிப்பு. மேலும், பெய்ஜிங் விதிப்படி தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் அந்த நாடு ஈடுபட்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா முட்டுக் கட்டையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசி இருப்பது சீனாவுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியது.
சீனா அதிர்ச்சி:
எனவே சீனா-அமெரிக்கா இடையேயான பிளவு மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது. கடந்த 1979-ம் ஆண்டு தைவானுடன் ராஜங்க ரீதியிலான உறவை அமெரிக்கா துண்டித்தது. இந்நிலையில், ஒரே சீனா என்ற கொள்கையை தைவான் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், புதிய தைவான் அரசுடன் அனைத்து தொடர்புகளையும் சீனா துண்டித்துவிட்டதாகவும் அந்த நாடு குற்றம் சுமத்தியுள்ளது. இந்நிலையில், நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டிருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் டொனால்டு ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசியிருப்பது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கி இருக்கிறது. எனவே, டொனால்டு ட்ரம்ப் செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
ட்ரம்ப் கடும் தாக்கு:
இதுதொடர்பாக ட்ரம்ப் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
எங்களது நிறுவனங்களுடன் போட்டியிட சீனா அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனா பொருள்களுக்கு எங்களது நாட்டில் வரி எதுவும் விதிக்கப்படவில்லை, ஆனால் சீனாவுக்கு செல்லும் எங்களது நாட்டு பொருள்களுக்கு வரி விதித்து எங்களது நிறுவனங்களின் போட்டியை எதிர் கொள்ள சீனா தயாராக இருக்கிறதா என்று அதில் கேள்வி எழுப்பி இருக்கிறார். தெற்கு சீனா கடற்கரை பகுதியில் ராணுவ தளத்தை அமைக்க சீனா யாரிடமாவது அனுமதி வாங்கியதா என்றும் டொனால்டு ட்ரம்ப் அந்த பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் விளக்கம்:
இதுதொடர்பாக சர்ச்சை எழுக்கூடாது என்பதற்காகவே அமெரிக்காவில் புதிய துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது தைாவான் அதிபருடன் பேசியது மரியாதை நிமித்தமானது என்று விளக்கியிருந்தார். இந்நிலையில் சீனா இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது அமெரிக்கா சீனா இடையிலான விரிசலை அதிகரித்துள்ளது. ஒரே தேசம் என்ற சீனாவின் கொள்கையை அமெரிக்கா மதித்து நடக்க வேண்டும் என்று அந்நாட்டு தரப்பில் விமர்சிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக ட்ரம்ப் -தைவான் அதிபர் சாய் இங்வென் ஆகிய இருவரில் யார் முதலில் பேசியது என்ற தகவல் வெளியாகாமல் இருந்தது. தற்போது அது குறித்து அமெரிக்கா வெளியிட்ட தகவலில் முதலில் தைவான் அதிபர் சாய் இங்வென் தான் அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட்டு ட்ரம்ப்புடன் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary:
Washington: Tweets come days after courting Chinese anger over telephonic call with Taiwan president. U.S. President-elect Donald Trump fired a Twitter broadside at China on Sunday, accusing the Asian giant of currency manipulation and military expansionism in the South China Sea.