பெங்களூர்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த 20 மாநில முதல்வர்கள் தமிழகம் வருகை தர உள்ளனர். மேலும் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களில் இன்று ஒருநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு மத்திய அரசு ஒருநாள் துக்கத்தை அறிவித்துள்ளது.
இதேபோல் கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், பீகார் மாநிலங்களும் ஜெயலலிதா மறைவுக்கு ஒரு நாள் அரசு முறை துக்கம் கடைபிடிப்பதாக அறிவித்துள்ளன. புதுவையில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
அத்துடன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கேரளா ஆளுநர் சதாசிவம் தமிழகம் வருகிறார். மேலும் 20 மாநில முதல்வர்களும் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகின்றனர்.
English summary:
Uttarakhand, Karnataka and Bihar declare one-day state mourning as a mark of respect to late Jayalalithaa.