டெல்லி: வங்கக் கடலில் உருவாகியுள்ள வர்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வரும் 11-ம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும், கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. வர்தா என பெயரிடப்பட்டுள்ளது.பாகிஸ்தான் நாடு இந்த பெயரை சூட்டியுள்ளது. இந்த புயலானது விசாகப்பட்டினத்தில் இருந்து தென் கிழக்கில் 1,060 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் அந்த மான் நிக்கோபர் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
இதனால், 11-ம் தேதி முதல் ஆந்திராவில் பலத்த மழை பெய்யும். கடலில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதால் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காற்று மண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வங்கக்கடலில் அண்மையில் உருவான நடா புயல் கடந்த 2-ஆம் தேதி வலுவிழந்து காரைக்கால் அருகே கரையை கடந்தது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் மேலும் ஒரு புயல் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary:
New delhi : Varda cyclone formed in Bay of Bengal move towards Andhra.