சென்னை, புத்தாண்டு தினமான நேற்று முன் தீனம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் 1 லட்சம் பேர் வந்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த மாதம் 5-ந்தேதி காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக 75 நாட்களாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் உடல்நிலை சீராகி வந்த நிலையில் திடீரென அவர் மரணம் அடைந்தது அ.தி.மு.க. தொண்டர்களையும் தமிழக மக்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.ஜெயலலிதாவின் உடல் மறுநாள் (6-ந்தேதி) மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் அவரது சமாதியில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.சென்னை மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
தினமும் 40 ஆயிரம் பேர் வரை ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
புத்தாண்டு தினமான நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சாரை சாரையாக மக்கள் திரண்டு வந்தனர். நேற்று முன் தீனம் மட்டும் அதிகபட்சமாக 1 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினர். இதனால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு 28 நாட்களாகிறது. இருப்பினும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த வருவோரின் கூட்டம் குறையாமலேயே உள்ளது.இது தமிழக மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அளவு கடந்த அன்பை காட்டுவதாக உள்ளது. ஜெயலலிதா சமாதியில் தினமும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 உதவி கமிஷனர்கள், 9 இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கிறார்கள்.
English Summary:
Chennai, New Year's Day before yesterday 1 million people came to pay homage at the memorial of the former Chief Minister Jayalalithaa.