புதுடில்லி : கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது என்ற முடிவை பெட்ரோல் முகவர்கள் சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. அதன்படி, ஜன., 13 ம் தேதி வரை கிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் பெறலாம்.
1 சதவீத வரி:
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்பு அளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., உள்ளிட்ட சில வங்கிகள் பெட்ரோல் பங்குகளின் மின்னணு பரிவர்த்தனைக்கு 1 சதவீத வரியை விதித்தன. மேலும், அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை தாமாதமாக பரிமாற்றம் செய்தன. இதனால், தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக கூறிய பெட்ரோல் முகவர்கள் சங்கம் இன்று முதல் கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்க மாட்டோம் என அறிவித்தது. இந்நிலையில், அந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முடிவு ஒத்திவைப்பு:
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலிய முகவர்கள் சங்க தலைவர், கே.பி.முரளி கூறியதாவது:மின்னணு பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் 1 சதவீத வரியால் பெட்ரோல் பங்கு முகவர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இது தொடர்பான, எங்கள் பிரச்னைகளை எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவர்கள் மத்திய அமைச்சருடன் பேசினார்கள். பின்னர், ஜன.,13 வரை 1 சதவீத வரி பிடித்தம் செய்யப்படாது என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதை ஏற்று எங்கள் முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். ஜன.,13ம் தேதி வரை கார்டுகள் ஏற்கப்படும். அதற்குள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு காண முயற்சிப்போம். பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படாவிட்டால் கிரெடிட், டெபிட் கார்டுகள் வாங்கமாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
English summary:
NEW DELHI : credit and debit cards will not be accepted temporarily postponed a decision on the Petrol Dealers Association. Accordingly, Jan., 13 till Credit, Debit Card, fuel can be obtained.