இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இரண்டு பேர் இந்தியர்கள் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், ''துருக்கியில் இருந்து ஒரு மோசமான செய்தி வந்துள்ளது. இஸ்தான்புல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் இருவர் இந்தியர்கள் எனத் தெரிய வந்துள்ளது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரின் மகனான அபிஸ் ரிஸ்வி மற்றும் குஷி ஷா என்ற பெண்ணும் இதில் பலியாகியுள்ளனர் '' என்று சுஷ்மா தெரிவித்துள்ளார்.
முன்னதாக இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதலில் 16 வெளிநாட்டினர் உள்பட குறைந்தது 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை இன்னும் போலிசார் தேடி வருவதாக அமைச்சர் சுலேமான் சொய்லு தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நிகழ்ந்து பல மணி நேரங்கள் கழித்தும் தாக்குதல்தாரி எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 69 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
English summary:
Nightlife in Istanbul hotel in one of two people killed in the attack, the Indian External Affairs Minister Sushma Swaraj said.