மதுரை: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்து 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதியம் கோயம்புத்துருக்கு நாகர்கோவிலில் இருந்து பயணிகள் ரயிலை செல்லூர் பகுதி மக்கள், இளைஞர்கள், மாணவர்கள், மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த ரயில் அந்த ரயில் தடத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக இந்த ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவு கொட்டும் பனியிலும்
ரயில் மறியல் போராட்டத்தை கைவிடவில்லை.
இதனால் பயணிகளுக்கு இளைஞர்களே உணவு வழங்கினர். ரயில் மறியல் போராட்டத்தால் மதுரை ஜங்ஷனில் வெறிச்சோடி காணப்படுகிறது. மதுரையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் இந்த வைகை ஆற்று பாலத்தில் இந்த கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் இளைஞர்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் மறிலால் நெல்லை சந்திப்புக்கு வர வேண்டிய ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்தமிழகத்தின் முக்கிய ரயிலான பாண்டியன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே போல் சென்னையில் இருந்து தென்தமிழகத்திற்கும் வரும் ரயில்களான அனந்தபுரி, பொதிகை, கன்னியாகுமரி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மானாமதுரை, காரைக்குடி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.
English summary:
Madurai: Tamil Nadu jallikattu supporting the 5th day series have also been involved in the fight. Nagercoil-Coimbatore passenger from the train yesterday afternoon rival populations, youth, students are involved in the fight and intercept. Thus the train en route to the train was stopped. About 20 hours and the rail blockade is taking place. Night in the pouring snow train did not abandon the picket.