புதுடில்லி : நாட்டில் உள்ள 402 காவல் நிலையங்களில் போன் வசதி இல்லை, 134 போலீஸ் நிலையங்களில் வாகன வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணியகம் (Bureau of Police Research and Development) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் 15,555 காவல் நிலையங்கள் உள்ளது. அதில், 188 காவல் நிலையங்களில் வாகனங்கள் இல்லை, 402 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி இல்லை, 134 காவல் நிலையங்களில் வயர்லெஸ் வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2016 வரை நாடு முழுவதும் காவல் துறையில் மொத்தம் 22,80,691 பேர் பணியில் உள்ளனர். அவர்களில் 5,56,539 பேர் மட்டுமே காவலர் குடியிருப்புகளை பெற்றுள்ளனர். ஒட்டு மொத்தமாக 729 பொதுமக்களுக்கு ஒரு காவலர் என்ற விகிதாசாரத்தில் தற்போதைய நிலை உள்ளதாகவும், அவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. போலீசாரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் சுமார் 5 லட்சம் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ள மற்றொரு புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary:
The country had no phone at 402 police stations, 134 police stations bombshell revelation that the vehicle is not comfortable.