திருவனந்தபுரம் : உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தனித்துப் போட்டி:
உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பிற இடதுசாரிகள் கட்சியுடன் சேர்ந்து தனித்து போட்டியிடுவதாக சி.பி.எம்.,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாய்ப்பில்லை :
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 3 நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் சி.பி.எம்., பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி தெரிவித்ததாவது: உ.பி.,யில் மதச்சார்பற்ற மகா கூட்டணி அமைவதற்கு வாய்ப்பில்லை. அங்கு மதவாத சக்திகளுக்கு எதிராக களமிறங்க அதிக கவனம் செலுத்தப்படும்.
மேலும் மதவாத சக்திகளின் அச்சுறுத்தல்கள், தற்போதைய தாராளமய கொள்கைகளின் அபாயங்கள் ஆகியவற்றின் காரணமாக 5 மாநில சட்டசபைகளில் இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
Thiruvananthapuram : UP, Punjab, including 5 in the state assembly elections, the Left parties, CPI will run separately.