புதுடில்லி:உ.பி.,யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுக்கள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.
690 தொகுதிகளில்...:
டில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியதாவது: 5 மாநிலங்களில் 690 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 16 கோடி பேர், வாக்களிக்க உள்ளனர். 1.85 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைவருக்கும் போட்டோவுடன் கூடிய வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பெண் அலுவலர்கள் கொண்ட பிரத்யேக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். ரகசியம் காக்க வாக்கு எந்திர மேஜையின் உயரம் உயர்த்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. ராணுவத்தினர் இணைய வழியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அமைதியாக நடக்க துணை ராணுவப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய வசதி செயயப்பட்டுள்ளது என்றார்
தேர்தல் தேதி:
* கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப். 4ம் தேதி தேர்தல் நடைபெறும்
* உத்தர்காண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறும்.
* மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக மார்ச் 4 மற்றும் மார்ச் 8 ம் தேதிகளில் தேர்தல் நடக்கும்
* உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டமாக 73 தொகுதிகளில் பிப் 11ம் தேதி தேர்தல்
இரண்டாம் கட்டமாக 67 தொகுதிகளில் பிப்ரவரி 15ல் தேர்தல்
மூன்றாம் கட்டமாக 69 தொகுதிகளில் பிப்., 19ல் தேர்தல்
நான்காம் கட்டமாக 53 தொகுதிகளில் பிப்23ல் தேர்தல்
ஐந்தாம் கட்டமாக 52 தொகுதிகளில் பிப்ரவரி 27ல் தேர்தல்
ஆறாம் கட்டமாக 49 தொகுதிகளில் மார்ச் 4ல் தேர்தல்
ஏழாவது கட்டமாக 40 தொகுதிகளில் மார்ச் 8 ல் தேர்தல் நடக்கும்அதாவது பிப்.4ம் தேதி துவங்கி மார்ச் 8 ம் தேதி ஓட்டுப்பதிவு முடிகிறது.
5 மாநிலங்களிலும் பதிவான ஓட்டுகள் வரும் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன
உ.பி.,யில் 403 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும், உத்தர்கண்டில் 71 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
English summary:
New Delhi: UP, 7 stage, 2 stage in Manipur, Goa, Punjab, Uttarakhand and the election is to take place in a single phase. Votes on March 11 numbered.