புதுடில்லி : உ.பி., கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. இதனால் தேர்தல் துவங்குவதற்கு முன்னதாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
குழப்பத்தில் எதிர்க்கட்சிகள் :
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அட்டவணையின்படி பிப்ரவரி 4 ம் தேதி துவங்கி மார்ச் 8 ம் தேதி வரை தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5 மாநிலங்களில் பதிவான ஓட்டுக்கள் மார்ச் 11 ம் தேதி எண்ணப்பட உள்ளன. ஆனால் பட்ஜெட் கூட்டத்தொடரை ஜனவரி 31 முதல் நடத்தவும், பிப்ரவரி 1 ம் தேதியன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் சலுகைகள், வரி விதிப்புக்கள் போன்றவை ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமலுக்கு வருவது வழக்கம். இது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் சட்டசபை தேர்தல்களின் முடிவை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியிடம் முறையிட்டன. இதனால் ஜனாதிபதி பரிந்துரையின் பேரில் மத்திய அரசும், பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதியை பிப்ரவரி இறுதி நாளுக்கு பதிலாக, பிப்ரவரி 1 ம் தேதிக்கு மாற்றியது. இப்போது முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 4 ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.
முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் :
ஆனால் தற்போது பிப்ரவரி 4 ம் தேதி, 5 மாநில தேர்தல் துவங்கும் எனவும், இதற்கான நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதனால் தற்போது முடிவு செய்துள்ள பிப்ரவரி 1 ம் தேதிக்கு முன்னதாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது பட்ஜெட் உடன் சேர்த்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளதால் பார்லி., பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கும் ஜனவரி 31ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் அல்லது பட்ஜெட் கூட்டத்தொடர் தேதியும் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Uttar Pradesh, Goa, including 5 of the Election Commission today announced the schedule for the state assembly elections. Before the commencement of the election are expected to be filed in the federal budget.