சென்னை: வங்கி ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு ரூ.2500 எடுக்கலாம் என்ற உச்சவரம்பு தளர்த்தப்பட்டு ரூ.4500 வரை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் அறிவித்த தினம் சனி மற்றும் ஞாயிறு என்பதால் அந்த வசதியை யாராலும் பெற முடியவில்லை. இந்நிலையில் வேலை நாளான இன்று வண்ணாராப்பேட்டையில் வங்கியின் முன்னாள் நூற்றுக்கணக்கான மக்கள் பணம் எடுக்க காத்து கொணடுள்ளனர். ரூ.500 மற்றும்1000 செல்லாது என்று அறிவித்த பிரதமர் மோடி 50 நாட்களுக்குள் பணப்பிரச்சனை தீர்ந்து விடும் என்று கூறினார். ஆனால் 50 நாட்களை கடந்து இன்று வங்கிகளில் பணம் எடுக்க நூற்றுக்கணக்கான மக்கள் இன்று அதிகாலை 4 மணி முதல் காத்துக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இன்னும் வங்கி திறக்கப்பட்டவில்லை. 50 நாளை கடந்து தங்களுடைய சம்பளத்தை எடுக்க முடியாமல் நீண்டவரிசையில் காத்துகொண்டு இருக்கின்றனர். இவ்வளவு நாட்களாக பொருத்திருந்தும் இன்னும் பணப் பிரச்சனை தீரவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது முழுபணத்தை எடுக்க முடியவில்லை என்று தொடர்ந்து பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து வயதானவர்கள் முதியவர்கள் அவர்களுக்கு வழங்கும் பென்சன் பணத்தை எடுக்கமுடியவில்லை என்று வருத்தத்தை தெரிவித்துள்ளனர். தங்களது சம்பளப்பணதை கூட எடுக்க முடியாமல் மக்கள் தொடர்ந்து அவதிக்கு ஆளாகி வருகின்றனர். 50 நாட்களில் பணப்பிரச்சனை தீரும் என்று பிரதமர் அறிவித்தாலும் இன்னும் தீராமல் இருக்கிறது. இந்த பிரச்சனை எப்போது தான் தீரும் என்று தெரியாமல் மக்களின் அவதி நிலை நீடித்துகொணடே இருக்கின்றது.
English Summary:
Chennai: Bank ATMs per day in 2500 to take the federal government announced that it may take up to the ceiling and relaxed Rs .4500. Since announcing the day on Saturday and Sunday, but could not get none of that feature