சென்னை: - இலங்கை அரசு கைப்பற்றியுள்ள தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விரைவில் புதுப்பித்து மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடிவரும் 51 தமிழக மீனவர்களையும், அவர்களது 114 படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு கடிதம் :
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்களிடமிருந்து பிடிபட்ட படகுகள், நாட்டுடைமையாக்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா பேசியுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளை சுட்டிக்காட்டியுள்ளார். இதே கருத்தை இலங்கை வடக்கு மாகாண மீன்வளத்துறை அமைச்சர் பாலசுப்பிரமணியம் தீனேஷ்வரனும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நிலவரப்படி, தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 114 மீன்பிடிப் படகுகள், இலங்கையின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன. அந்தப் படகுகள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளார். கடந்த 31-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இருநாட்டு மீன்வளத்துறை கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தில் இப்பிரச்னையை தமிழ்நாடு அரசும் எழுப்பியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு இலங்கைக் கடற்படையால் பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 80 படகுகள் 2015-ம் ஆண்டுதான் விடுவிக்கப்பட்டன. இவற்றில், 16 படகுகள் சீர் செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டன. 31 படகுகளில் பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. 33 படகுகளில் சிறு அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தமிழக மீனவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, விடுவிக்கப்படும் படகுகளை புதுப்பித்து மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
கண்டனம் தெரிவிக்க வேண்டும் :
இந்த சூழ்நிலையில் பிடிபட்ட படகுகளை இலங்கைக்கு சொந்தமாக்கப் போவதாக வெளியாகியுள்ள அறிவிப்பால், தமிழக மீனவர்கள் பெரும் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர். இதுபோன்ற துரதிருஷ்டவசமான, ஆத்திரமூட்டும் அறிவிப்புகள் தமிழக மீனவர்களின் பாரம்பரிய பாக். நீரிணைப் பகுதியில் அவர்களை மீன்பிடிக்க விடாமல் மறைமுகமாக மிரட்டும் நடவடிக்கையாகும். இந்தப் பிரச்னையை தூதரக ரீதியில் சமாளிக்க இந்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இலங்கை அரசின் இந்தச் செயல், கேலி செய்வதுபோல அமைந்துள்ளது. எனவே, இதுபோன்ற அறிவிப்புகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
ஒப்படைக்க நடவடிக்கை எடுங்கள் :
1974-ம் ஆண்டு இந்தியா - இலங்கை செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே நிலுவையில் இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்திய அரசு இப்பிரச்னையில் தலையிட்டு இலங்கை வசமுள்ள இந்திய மீனவர்களுக்கு சொந்தமான படகுகளையும், மீன்பிடி உபகரணங்களையும் புதுப்பித்து தமிழக மீனவர்களிடம் விரைவில் ஒப்படைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக முதலமைச்சர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடிவரும் 51 தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
English Summary:
The fishermen's boats and fishing gear seized by the Sri Lankan Government to quickly checkout Should be handed over to the fishermen and 51 Indian fishermen in Sri Lankan jails regularly, the release of their 114 boats Chief Minister Narendra Modi urging the government to take immediate action oh. Paneer Selvam wrote.