புதுடில்லி : சகாரா நிறுவன தலைவர் சுப்ரதா ராய்க்கு விதிக்கப்பட்ட ரூ.600 கோடி அபராத தொகையை பிப்ரவரி 6 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
சகாரா நிறுவனம் மீதும், அதன் தலைவர் சுப்ரதா ராய் மீதும் 2012ம் ஆண்டு நிதி முறைகேடு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், ரூ,600 கோடி அபராதத்தை டெபாசிட் செய்யும்படி சுப்ரதா ராய்க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் 2016 ம் ஆண்டு மே மாதம் தனது தாய் மரணமடைந்ததை அடுத்து, அவருக்கு இறுதி சடங்குகள் செய்வதற்காக பரோலில் வெளியே வந்தார் சுப்ரதா ராய். இவர் இப்போது வரை வெளியில் தான் உள்ளார்.
ரூ.600 கோடி அபராதம்:
இந்நிலையில், நவம்பர் மாதம் இவ்வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிப்ரவரி 6ம் தேதிக்குள் ரூ.600 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறைக்கு திரும்ப வேண்டி இருக்கும் என எச்சரித்தது. இருப்பினும் ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரம், பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களை கூறி, சுப்ரதா ராய் இதுவரை அபராதத்தை செலுத்தாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அபராதத்தை செலுத்த மேலும் அவகாசம் கேட்ட சுப்ரதா ராயின் வழக்கறிஞரான கபில் சிபிலிடம், உங்களுக்கு ஏற்கனவே நிறைய கால அவகாசம் அளிக்கப்பட்டு விட்டது. இந்த விவகாரம் 2012 ல் துவங்கியது. தற்போது 2017 ஆகி விட்டது. பல வாய்ப்புகள் அளிக்கப்பட்டு விட்டது. இதனால் மேலும் அவகாசம் வழங்கப்படாது. அபராதத்தை பிப்ரவரி 6 க்குள் செலுத்துங்கள் இல்லாவிட்டால் சிறைக்கு செல்லுங்கள் என சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் தெரிவித்தது.
English summary:
NEW DELHI: Sahara chief Subrata Roy imposed penalties of Rs 600 crore to be paid on or before February 6, the Supreme Court has strictly.