சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 15 பேர் கொண்ட குழுவை மாணவர்கள் அமைத்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று காலையும் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையும் ஏற்க மறுத்த இளைஞர்கள் முதல்வர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர்.
தொடர்ந்து அவர் மீண்டும் மாலை இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மாணவர்கள் ஒப்புக்கொண்டனர். இதற்காக அவர்கள் 15 பேர் கொண்ட குழுவையும் மாணவர்கள் அமைக்க உள்ளனர்.
English summary:
Chennai: The Tamil Nadu government to negotiate with jallikattu formed 15-member group of students.