சென்னை : ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் இளைஞர்கள் மனிதசங்கிலி
போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி கடந்த வாரம் மெரீனாவில் இளைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடத்திய பேரணி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது சுப்ரீம் கோர்ட் பொங்கலுக்கு முன், ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப்பில்லை என தெரிவித்ததால், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு சென்னை கலங்கரைவிளக்கத்தில் இருந்து 1 கி.மீ., தொலைவிற்கு இளைஞர்கள் மனிதசங்கிலி நடத்தி வருகின்றனர்.
மனிதசங்கிலியில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் அனைவரும், சமூக வலைதளங்கள் மூலம் இணைந்தவர்கள் என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் தகவல்கள் பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதசங்கிலி போராட்டத்தில் கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.
English Summary:
Chennai: Marina Beach in Chennai urging young people to allow Jallikattu have staged a human chain protest.