புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தில் தற்காலிக மந்த நிலை ஏற்படலாம் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
கறுப்பு பண ஒழிப்பு:
இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய அரசு மேற்கொண்ட ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையானது, கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க பயன்படுகிறது. எனினும் இதனால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். இது தற்காலிகமானதே.
கூடுதல் கவனம் தேவை:
கறுப்பு பணம் மற்றும் ஊழலை எதிர்க்கும் நடவடிக்கையை வரவேற்கிறேன். எனினும் ஏழைகளுக்கு இதனால் சிரமம் ஏற்படாமல் இருக்க அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காங்., வரவேற்பு:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் இந்த கருத்துக்கு காங்., கட்சி வரவேற்பு அளித்துள்ளது.
இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜ்வாலா கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில் சோம்பேறி குழந்தையான பிரதமருக்கு, குடும்ப தலைவர் ஜனாதிபதி பாடம் கற்பித்துள்ளார். உண்மையை கூறிய ஜனாதிபதியின் பேச்சை பிரதமர் மோடி கேட்பாரா?. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
NEW DELHI: The rupee note temporary slowdown in the economy may be withdrawn by the Indian President Pranab Mukherjee.